Sun Worship

*குளிர் ப​​னிக் காலத்திலே சூரியனின் வெப்பம் மேகமூட்டத்தினால் மட்டுப் படுத்தப் பட்டு தட்ப வெப்ப நிலைகளினால் மறைந்து விட்டது போல காணப்படும் பொழுது கிரேக்கர்கள் தாங்கள் வணங்கி வந்த சூரியக் கடவுளான தம்மூசை வன விலங்கு ஒன்று கொன்று விட்டது, எனவேதான் தங்களால் குளிரை தாங்க இயலவில்லை, மரங்கள், செடிகள் உணவு தயாரிக்க இயலவில்லை, தங்களது விவசாயங்கள் பாதிப்படைந்து விட்டது என்று 40 நாட்கள்* துக்கங் கொண்டாடி அழுதார்கள். சூரியனைப் பாதாள உலகிலிருந்து திருப்பிக் கொண்டு வருமாறு தங்களது வானலோக ராணியான, நிலவு தேவதையான இஷ்டாரை வேண்டி ஒப்பாரி வைத்தார்கள் பெண்கள். இதற்குள் சூரியன் காணப்படுகின்றது இஷ்டார்தான் விரதமிருந்து பாதாளம் வரை சென்று சூரியனை திருப்பிக் கொண்டு வந்தாள் என்று சொல்லி இஷ்டாருக்கு ஒரு பெரிய விழா (ஈஸ்டர்) கொண்டாடினார்கள். ஞானம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்ற கிரேக்கர்கள் இந்த பாரம்பரியத்தைப் பெற்றுக்கொண்டது சீரியர்களிடமிருந்து.

*எசேக்கியேல் 8:14ல் எருசலேம் தேவாலயத்திலே தம்மூசுக்காக அழுது கொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள் என்று காண்கிறோம்*.

*எசேக்கியேல் 8:16ல் எருசலேம் தேவாலயத்திலே ஆண்கள் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கு நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள் என்பதிலிருந்து கிரேக்கர்களின் சூரியக் கடவுளான தம்மூசு வழிபாடு எருசலேம் தேவாலயத்திற்குள்ளும் வந்து விட்டது என்று காண்கிறோம்*.

கிரேக்கர்கள் அதாவது ரோமானியர்கள் தங்களது அரசாட்சியில் குற்றம் புரிந்தோரைத் தங்களது சூரியக்கடவுள் தண்டிக்கின்றது, சுட்டெரிக்கின்றது என்ற மனோதத்துவத்திலேயே சூரியக்கடவுளான தம்மூசை குறிக்கும் கிரேக்க எழுத்தான  (Tau) அதாவது ஆங்கில எழுத்தான  “ T ” வடிவில் காணப்படும் மரவிக்கிரகத்தில் அறைந்தார்கள். 

எசேக்கியேல் 8:5ல் காணப்படும் விக்கிரகம் பிற மொழி பெயர்ப்புகளில் *எரிச்சலின் விக்கிரகம்* (தம்மூசு) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எசேக்கியேல் 8:3ல் காணப்படும் விக்கிரகம் பிற மொழி பெயர்ப்புகளில் *எரிச்சல் மூட்டுகிற விக்கிரகம்* (அசேராக்கம்பம்) என வேறுபடுத்தப்பட்டுள்ளது.

1 இராஜாக்கள் 14:22,23ல் யூதா ஜனங்கள் கர்த்தருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள், உயர்ந்த சகல மேட்டின் மேலும், *பச்சையான சகல மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும்* தங்களுக்கு உண்டாக்கினார்கள் என்று காண்கிறோம். இந்த தோப்பு விக்கிரகங்கள் என்பது பிற மொழி பெயர்ப்புகளில் அசேராக்கம்பம் எனப் படுகின்றது. அசேரா என்பது உற்பத்தி, செல்வம், விளைச்சல் ஆகியவற்றின் பெண் கடவுளாக கானானியர்களால் வணங்கப்பட்டது. அசேரா என்ற சொல் அசார் என்ற பதத்திலிருந்து வருகின்றது. இதன் பொருள் செங்குத்தாக இருக்கும்படி என்பதாகும். அசேராக்கம்பம் என்பது பாதி வெட்டப்பட்ட பச்சை மரத்தின் தண்டு பகுதி. இதில் பாகாலின் விக்கிரகம் அல்லது ஏதாவது இச்சையூட்டும் விக்கிரகம் செதுக்கப்பட்டிருக்கும், தீர்க்கன் எசேக்கியேல் இதை ஆணின் உறுப்பு என்கிறார் (எசேக்கியேல் 16:17) இது பச்சையான மரங்கள் நிறைந்த தோப்புகளில் செங்குத்தாக நடப்பட்டிருக்கும். இதன் முன்னிலையில் அளவுக்கதிகமான மது போதையுடன் கூடிய நடனம் மற்றும் முறைகேடான விபச்சாரத்துடன் ஆசரிக்கப்பட்ட வழிபாடே அசேராக்கம்ப வழிபாடு.

ஆதியாகமம் 30:37-39ல் முற்பிதா யாக்கோபு மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும் படி, பட்டையை உரித்து, அவைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டு வைத்தார், அந்நேரம் பொலிந்த (கருத்தரித்த) ஆடுகள் விதவிதமான நிறங்களில் குட்டிகளைப் போட்டது என்று காண்கிறோம். இங்ஙனம் *ஒரு பெண் ஆடு பல ஆண் ஆடுகளுடன் பொலிகின்ற நிலை*.

*பச்சை நிறம் இச்சை மூட்டும்*. 

*அசேராக் கம்ப வழிப்பாட்டிற்கும், முற்பிதா யாக்கோபின் தந்திரத்திற்கும் தொடர்பிருக்கிறதைக் கவனியுங்கள்*

*சிலுவை ஏன் பெரும்பாலும் இரண்டு துண்டுகள் இணைத்து செய்தது போல் காணப்படுகின்றது? நடுவில் ஏன் இணைப்பு உள்ளது?* படத்தில் நடுவில் உள்ள சிலுவை நேர் பாதியில் இலை தழைகளுடன் தோன்றுவதைப் பாருங்கள். *அசேராக்கம்பமும், தம்மூசும்* ஒருங்கே அமைக்கப் பெற்றிருக்கிறதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எசேக்கியேல் 8:17ல் கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள் எனக் கர்த்தர் மனம் வெம்புகிறதைக் காண்கிறோம். நாம் இன்று பாடகர் குழு பவனியில் அதைப் போன்றே நாசிக்கு (மூக்கிற்கு) நேராக சிலுவையைப் பிடிக்கிறோம் பாருங்களேன்.

ரோமானியர்கள் ஆட்சி முறையில் இயேசுவை தம்மூசில் அறைந்தனர். ஒரு வேளை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்திருப்பின் தூக்கிலிட்டிருப்பர். அவ்வாறெனில் தூக்கு மரத்தைத் தூக்கி சுமப்பீர்களா? கழுத்தில் தூக்குக் கயிறை தொங்கவிடுவீர்களா? குழந்தையின் நெற்றியில் தூக்கு மரத்தை வரைவீர்களா?

*ஏன் ஆணி, முள் முடியை விட்டு விட்டீர்கள்*?

2 தெசலோனிக்கேயர் 2:4ல் கேட்டின் மகன் தேவனென்னப் படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் என்று அப்போஸ்தலராகிய பவுல் எச்சரித்துள்ளார்,  கர்த்தரின் ஸ்தானத்திற்கு மேலாகத் தம்மூசை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று *நயவஞ்சகமாக ரோமானியம் நமக்களித்ததே நம்முடைய கரங்களில் உள்ள உயரமான சிலுவை.*

யாத்திராகமம் 20:4ல்  ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் என்ற கர்த்தரின் *முதற்கட்டளையின் பொருள்தான் என்ன?*

ஏசாயா 40:18ல் *எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?*

ஏசாயா 46:5ல் *யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?* என்று கர்த்தர் விசனங்கொள்வதின் பொருள்தான் என்ன?

பலிபீடத்தை நோக்கிக் கையெடுத்து கும்பிடும் பொழுது நமக்குத் தெரியாமலே நமது சிந்தைக்கு, நம் கண்ணுக்குப் புலப்படுவது கிறிஸ்துவா? தம்மூசா?

இயேசுவின் சீடர்கள், அப்போஸ்தலர்கள், ஆதித் திருச்சபையோர்கள் *சிலுவையை அனுபவித்தார்களா? மாறாக உயரமாக தூக்கிச் சுமந்தார்களா?*

பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் ஆராதிக்கக் கூடுகின்ற இன்று தோன்றிய சுயாதீனத் திருச்சபைகளில் *சிலுவையைத் தங்களது ஆலயத்திற்குள் அனுமதித்திருக்கிறார்களா?*

ஒரு வயதானவர் தனது வீட்டை விற்கும் பொழுது வீட்டை வாங்குபவரிடம் தான் ஒரு *ஆணியை* மட்டும் சுவரில் அறைந்து விட்டுச் செல்ல அனுமதி கேட்டார், ஒரு ஆணிதானே என்று ஒத்துக்கொண்டார். மறு நாள் தான் விற்ற வீட்டிற்கு சென்று ஆணியை மட்டும் பார்த்து சென்றார், அதற்கடுத்த நாள் தனது செருப்பை மட்டும் தொங்க விட அனுமதி கேட்டார், மறு நாள் ஒரு கருவாட்டு கூடையை மட்டும் தொங்க விட அனுமதி கேட்டார். வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தலை தெறிக்க ஓடி விட்டார் வீட்டை வாங்கியவர்.

எனக்குத் தெரிந்த ஒரு தேவாலயத்தில் ஆலயம் கட்டப்பட்ட  நாளிலிருந்து தம்மூசு இல்லாமல் இருந்தது. சமீப காலமாக மிகுந்த ஆவலுடன் தம்மூசை பலி பீடத்தின் மேலே உயரமாக வைத்துள்ளனர். அடுத்த தலை முறையினர் தம்மூசில் இயேசுவை தொங்கவிடவேண்டுமென்பர், அதற்கடுத்த தலை முறையினர் இரு குற்றவாளிகள் பக்கவாட்டில் அறையப்பட வேண்டுமென்பர், அடுத்த தலை முறையினர் மரியாளின் உருவம் அருகில் வைக்கப்படவேண்டுமென்பர், அவ்வாறே இயேசுவின் உறவினர் அனைவரின் சிலையும் வைக்கவேண்டுமென்பர். 

*என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும் படியான இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை*. - எசேக்கியேல் 8:6,18

Comments

Post a Comment