Posts

Showing posts from December, 2019

Sun Worship

Image
​ *குளிர் ப ​​ னிக் காலத்திலே சூரியனின் வெப்பம் மேகமூட்டத்தினால் மட்டுப் படுத்தப் பட்டு தட்ப வெப்ப நிலைகளினால் மறைந்து விட்டது போல காணப்படும் பொழுது கிரேக்கர்கள் தாங்கள் வணங்கி வந்த சூரியக் கடவுளான தம்மூசை வன விலங்கு ஒன்று கொன்று விட்டது, எனவேதான் தங்களால் குளிரை தாங்க இயலவில்லை, மரங்கள், செடிகள் உணவு தயாரிக்க இயலவில்லை, தங்களது விவசாயங்கள் பாதிப்படைந்து விட்டது என்று 40 நாட்கள்* துக்கங் கொண்டாடி அழுதார்கள். சூரியனைப் பாதாள உலகிலிருந்து திருப்பிக் கொண்டு வருமாறு தங்களது வானலோக ராணியான, நிலவு தேவதையான இஷ்டாரை வேண்டி ஒப்பாரி வைத்தார்கள் பெண்கள். இதற்குள் சூரியன் காணப்படுகின்றது இஷ்டார்தான் விரதமிருந்து பாதாளம் வரை சென்று சூரியனை திருப்பிக் கொண்டு வந்தாள் என்று சொல்லி இஷ்டாருக்கு ஒரு பெரிய விழா (ஈஸ்டர்) கொண்டாடினார்கள். ஞானம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்ற கிரேக்கர்கள் இந்த பாரம்பரியத்தைப் பெற்றுக்கொண்டது சீரியர்களிடமிருந்து. *எசேக்கியேல் 8:14ல் எருசலேம் தேவாலயத்திலே தம்மூசுக்காக அழுது கொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள் என்று காண்கிறோம்*. *எசேக்கியேல் 8:16ல் எருசலேம்...